உலகநாயகன் தான் தமிழகத்துக்கு மிக அவசியமான அரசியல் நாயகனா ?

Politics

உலகநாயகன் தான் தமிழகத்துக்கு மிக அவசியமான அரசியல் நாயகனா ?

Illustration: Sushant Ahire / Arré

கமல்ஹாசனின் அரசியல் விமர்சனங்கள் அவரின் திரைப்பட வசனங்களை விட சர்ச்சைக்குள்ளாவது விசித்திரமானது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் மிகப்பெரும் ஆளுமை கொண்ட புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மர்மமான மரணத்திற்குப் பின் தமிழகத்தில் எதுவும் நடக்கக்கூடும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களே என்ன நடக்கவிருக்கிறது என்று தெரியாமல் எதிர்பார்த்து, தங்களின் மனக்கணக்குகள் போட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமது பிக் பாஸ் அரசியலுக்கு வருகை தந்துள்ளார். ஆனால் “நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, என்ன வேணாலும் செய்யலாம்” என்று சொன்ன நாயகனுக்கு இது தான் உரிய முடிவு என்று தோன்றிருக்கலாம்.

கமல்ஹாசன் தன் வழியிலே, அரசியல் பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறார். உதாரணம் – மையம் whistle என்ற கைபேசி செயலி. மக்களை சென்றடைய அவரின் முதல் முயற்சி. கடந்த சில வாரங்களாக, வருவாரா வரமாட்டாரா என்ற குழப்பம் நிலவியது. மாநில மற்றும் மத்திய அரசைச் சாடி அவர் ட்வீட் செய்ததே இதற்கு காரணம். அவர் தன் எண்ணங்களில் தெளிவாக இருந்தாலும் அது தெளிவாக மக்களுக்கு சென்றடையவில்லை. ஜெயலலிதா இதற்கு பேர்போன தலைவி. ஊடகங்களும் அவரை அரசியல் களத்தில் முன்னிறுத்த மும்முரமாக இருந்தன.

READ MORE

Comments