ஜெயலலிதாவின் மறு வாழ்வு

Politics

ஜெயலலிதாவின் மறு வாழ்வு

Illustration: Akshita Monga/Arré

ஜெயலலிதா, அம்மா, புரட்சித்தலைவி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் அனைத்து அதிகாரங்களும் சங்கமிக்கும் அரியணையில் அமர்ந்திருந்த இந்த பெண்மணி, மறைந்து இப்போது ஓராண்டு முடிந்துவிட்டது. சென்னை அப்போலோ மருத்துவ மனையின் மீது இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பலரின் கவனம் பதிந்திருந்து ஓராண்டு ஆகி விட்டது. இருப்பினும், ஜெயலலிதாவின் மீதுள்ள ஈர்ப்பு இன்னும் இம்மியளவும் குறையவில்லை.
ஒரு பெரிய தலைவரின் மறைவு ஜூலியஸ் சீஸரை நினைவூட்டுகிறது. குறிப்பாக ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் அந்தோணி கூறுகிறார்…
இறந்தவர் செய்த நல்லவை அனைத்தும் அவருடன் புதைக்கப்பட்டுவிடும்.
அவர் செய்த தவறுகள் அவர் இறந்த பின்னும் வாழும்.
சீஸர் செய்த நல்லவை அனைத்தும் அவருடனேயே இருக்கட்டும் என்கிறார்.

ஜெயலலிதா விஷயத்தில் நிலமை மேலும் சிக்கலாக உள்ளது. தமிழ்நாட்டின் மேலாளராகவும், காப்பாளராகவும் இருந்த அம்மாவின் மரபில், புதிர்கள் நிறைந்துள்ளன. ஒரு புறம், தன்னுடைய பலவித சமூக நிலத்திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அவர் தாயைப் போல இருந்தார். மறு புறம் ஊடகங்களை ஊமையாக்கி, தன் இரும்புப் பிடியினால் எதிரிகளை கைது செய்யும் ஏகாதிபதியாக இருந்தார். மன்னார்குடி மாஃபியா என்று அறியப்படும் அவருடைய விசுவாசிகளின் கூட்டத்திற்கு, அவர் ஒரு இரக்கமுள்ள தலைவராக இருந்து, அவர்கள் அனைவரையும் செழிக்க வைத்தார். அதே சமயம் திமுகவின் கருணாநிதி போன்ற அவருடைய எதிரிகளுக்கு, அவர் அசாதாரண எதிரியாக இருந்தார். சில எதிரிகளையாவது உருவாக்காமல் உச்சத்தை எட்ட முடியாது. தன்னுடைய வாழ்நாளில் இந்த அரசியல் விளையாட்டில் ஜெயலலிதா ஒரு சிறந்த வீரராக இருந்தார்.
இருப்பினும், அம்மாவின் முதலாண்டு நினைவு தினத்தில், அவருடைய நினைவுகள் தங்கள் நுணுக்கங்களை இழக்க ஆரம்பித்துவிட்டன. அவருடைய வரலாற்றில், நல்ல காலம், கெட்டக் காலம் இரண்டும் கலந்திருந்தாலும், அவருடைய கம்பீரத் தோற்றமும், மக்கள் அவர் மேல் கொண்டிருந்த அன்பும், அனைவரின் மனதிலும் பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ளது. எக்ஸ்கேலிபரைப் போல், அதிகாரத்தை திரட்டக் கூடிய எவரும் தேசத்தின் அதிபதியாகி விட முடியும். எனவே தான் அவர் மறைவுக்குப் பின், அஇஅதிமுகவை கட்டுப்படுத்த, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் இடையே மோதல் மூண்டது. அளவுக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளியானதால் அவர் அந்த வாய்ப்பை இழந்தார். அஇஅதிமுக மேஜையில் தலைமை இடமான அம்மாவின் இடத்தை பன்னீர்செல்வம் பிடித்தார். சசிகலாவிற்கு கிடைத்த தண்டனை, ஜெயலலிதாவின் மீதுள்ள களங்கத்தை சுத்தப்படுத்துவதை ஒத்துள்ளது. பொதுமக்கள் ஆதரவையும், முதலமைச்சர் பதவியையும், பன்னீர் தக்க வைத்துக் கொண்டார். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக மரபை சசிகலா பெற்றுக் கொண்டார். ஜெயலலிதாவின் அடையாளம், சீராக பிரிக்கப்பட்டது. சங்கடம் ஏற்படுத்தும் அவருடைய அம்சம் கண்ணில் படாமல் சிறைக்கு அனுப்பப்பட்டு, சுத்தம் செய்வதை துவக்க வழி வகுத்தது.

உயிருடன் இருந்த காலத்தில், ஜெயலலிதா ஒரு சில அரசியல்வாதிகளை மட்டுமே தன்னுடைய சகாக்களாகக் கருதினார். அவர் மறைந்து ஓராண்டிற்குப் பின், இப்போது மேம்பட்டவர்களுடன் அவர் இருக்கிறார். நம் சுதந்திர போராட்ட தலைவர்களான சர்தார் வல்லபபாய் பட்டேல் மற்றும் மஹாத்மா காந்தியை நாம் கௌரவிக்கிறோம், மரியாதை தருகிறோம் என்றாலும், தற்போதைய இந்தியாவில் மறைந்த பின்னும், ஒரு அரசியல்வாதியின் மீது மக்கள் அன்பைப் பொழிவது அபூர்வமானது. இதற்கு ஒரு பிரபலமான உதாரணம், பால் தாக்கரே அவர்கள். சிவசேனாவை அவர் வழி நடத்திய காலத்தில், அவருடைய எண்ணங்கள் மிக பாரபட்சமாக இருந்தாலும், இந்துத்வா அரசியல் கட்சியை அவர் நடத்திய போதிலும், அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின்னும், மக்கள் அவருக்கு இன்றும் ஒரு துறவிக்குரிய மரியாதையை தருகிறார்கள்.

READ MORE

Comments